Mega Biriyani Festival - முனியாண்டி விலாஸ் ஹோட்டல் மெகா பிரியாணி விழா





*200 ஆடுகள், 250 க்கு மேற்பட்ட சேவல்கள், 2500 கிலோ பிரியாணி அரிசியில் விடியற் காலையிலேயே 'கமகம' மட்டன், சிக்கன் பிரியாணி அன்னதானம்*

Website: www.yarnanban.blogspot.com

Instagram: yarnanban

Twitter: @yarnanban

Facebook: www.facebook.com/yarnanban


இந்த பிரியாணி அன்னதானத்திற்கு முன்பு நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.

மதுரை முனியாண்டி விலாஸ், இந்தப் பெயரைக் கேட்டாலே நாக்கில் எச்சில் ஊறும்.

தமிழகம் மற்றும் வெளிநாடுகள் முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் பரவிக்கிடக்கின்றது.

முனியாண்டி விலாஸ் என்ற ஹோட்டல் உருவானதற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா, கள்ளிக்குடி அருகேயுள்ளது வடக்கம்பட்டி என்ற கிராமம்.

இந்த வடக்கம்பட்டி கிராமம் தான் முனியாண்டி விலாஸ் ஹோட்டலின் தாய் வீடு.

வடக்கம்பட்டி ஊரில் முனீஸ்வரருக்கு கோயில் உள்ளது.

1935 -ம் வருடம் வடக்கம்பட்டி சுற்றுவட்டாரத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது.

சுப்பையா என்பவர் முனியாண்டி கோவிலிற்கு சென்று, பிழைக்க வழி செய்யுமாறு பிராத்தனை செய்துள்ளார். அன்று இரவு சுப்பையா என்பவரின் கனவில் வந்த முனீஸ்வரர், `அன்னம் விற்று பிழைப்பை பார்த்துக்கொள்' என்று கூறினாராம்.

முனீஸ்வரரின் வாக்கை ஏற்று 1935-ம் ஆண்டில் காரைக்குடியில் சுப்பையா முதன்முதலாக முனியாண்டி விலாஸ் அசைவ ஹோட்டலைத் தொடங்கியுள்ளார்.

முனியாண்டி விலாஸ் ஹோட்டல் மூலம் நல்ல வருமானம் சுப்பையா அவர்களுக்கு கிடைத்தது.

அதனை தொடர்ந்து ஊர் மக்கள் ஒன்றன் பின் ஒன்றாக முனியாண்டி விலாஸ் ஹோட்டல் தொடங்கினார்கள்.

தொடர்ந்து, மதுரை முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஹோட்டல்கள் உருவாகின.

அனைத்து முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களும், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

வடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் கூட முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் ஹோட்டல்களைத் தொடங்கி, நடத்தி வருகின்றனர்.

பிழைக்க புதிய வழி காட்டி, முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உதிக்கக் காரணமாக இருந்த முனீஸ்வரருக்கு, ஒவ் ஓவரு ஆண்டும், தை இரண்டாம் வெள்ளி காலை பால்குடம் எடுத்தும், மாலை அர்ச்சனை தட்டு எடுத்து வந்து மூனீஸ்வகுக்கு பூஜைகள் நடைபெறுகிறது.

பின் இரவு முழுவதும் கிடா வெட்டு நடைபெற்று, பின் சமையல் தொடங்கி காலை 4 மணியளில் மூனிஸ்வர்க்கு படையல் வைத்தும், பூஜைகள் நடத்தியும், சுற்றுபுறம் உள்ள 50 கிராம மக்களுக்கு பிரியாணி அன்னதானமாக வழங்கப்படுகிறது.

இவ்வாறு வடக்கம்பட்டி மக்கள் முனியாண்டி கோவிலுக்குவிழா எடுக்கின்றனர்.

85 வது ஆண்டாக இந்த ஆண்டு விழா நடைபெற்றது. முனீஸ்ரவர் விழாவின்போது பக்தர்களுக்குப் பிரசாதமாக மட்டன் சிக்கன் பிரியாணி வழங்கப்படுவதும் சிறப்பு அம்சம்.

இந்தாண்டு 200-க்கும் மேற்பட்ட ஆடுகள், 300 மேற்பட்ட சேவல்கள், 2500 கிலோ பிரியாணி அரிசி கொண்டு பிரியாணி சமைத்து அன்னதானம் வழங்கப்பட்டது.

முனியாண்டி கோவிலில் உள்ள முனிஸ்வரர் சைவம் எனவே அவருக்கு பொங்கல் படைக்கப்படுவதாகவும், அவர் அருகில் உள்ள கருப்பணச்சாமி முன்பே கொட வெட்டு நடந்து படையல் வைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

இதற்காக 50 பிரமாண்ட பாத்திரங்களில் கோயில் வளாகத்தில் இரவு முழுவதும் சமையல் நடைபெறும். பின் சனிகிழமை அதிகாலை 4 மணிக்கு முனீஸ்வரருக்குப் பிரியாணி படைக்கப்படும். பிறகு காலை 5 மணி முதலே பக்தர்களுக்குப் பிரியாணி பிரசாதமாக வழங்கப்படும்.

முனீஸ்வரர் கோயில் மட்டன் பிரியாணியை யார் வேண்டுமானாலும் வாங்கிச் சாப்பிடலாம். வீட்டுக்கும் வாங்கிச் செல்லலாம் என்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி சிறிய அளவில் தொடங்கியது தற்போது மிக பெரிய அளவில் நடைபெறுகிறது வியாழன் மற்றும் வெள்ளி இரவு வரை மக்களுக்கு மற்றும் விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 6 முறை சைவ உணவு வழங்கப்படுவதாகவும், சனிகிழமை காலை மட்டும் பிரியாணி பிரசாதமாக வழங்கப்படுவதாகவும், முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விழாவிற்கான முழு ஏற்பாடுகளும் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களே செய்வதாக தெரிவித்தனர்.

முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் மற்றும் உறவினர்கள் கூறும் போது அதிகாலை வழங்கப்படும் பிரியாணி பிரசாதம் சாப்பிடுவதன் மூலம் குழந்தை வரம், கல்யாணம் வரம், வீடு வாகனம் வாங்கும் யோகம், நோய்கள் சரியாவதாக கூறுகின்றனர்.

Comments