உள்ளாட்சி தேர்தல் என்றால் என்ன?
2019 - Tamil Nadu Local Body Election Means - உள்ளாட்சி தேர்தல் என்றால் என்ன ? பாகம் - I = FULL VIDEO உள்ளாட்சியில் உள்ள பதவிகள் பற்றி தெளிவாக இந்த காணொளியில் காண்போம். தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் இன்னும் பலருக்கு உள்ளாட்சிதேர்தல் பற்றி போதிய தகவல்கள் தெரியவில்லை. இந்த காணொளியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்... தற்போது தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி ஒன்றியங்களுக்கு ஆன போட்டிகள் மட்டுமே நடைபெறுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தேர்தல் பின் அறிவிக்கப்படும் என கூறியுள்ளனர். தற்போது உள்ளாட்சி தேர்தலில் ஒரு நபர் 4 ஓட்டுகள் போட வேண்டும். இதற்காக நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும். இதில் ஊரக உள்ளாட்சியில் வரும் நான்கு பதவிகள் 1) மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 2) ஒன்றியக் குழு உறுப்பினர் 3) ஊராட்சி மன்றத் தலைவர் 4) ஊராட்சி வார்டு உறுப்பினர். தற்போது மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி பற்றி பார்ப்போம்... எடுத்துக்காட்டாக மதுரை ஊராட்சியை எடுத்துக்கொள்வோம். மதுரை மாவட்டத்தைப் பொருத்த வரை 13 ஊராட்சிகள் உள்ளது. ஆனால், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 40,000 முதல் 50,000 ஓட்டுக்கு 1 நபர் என தேர்ந்தெடுக்கப்படுவார். எடுத்துக்காட்டாக திருப்பரங்குன்றம் ஊராட்சியை எடுத்துக்கொள்வோம் இங்கு மக்கள் தொகை ஒரு லட்சத்து 40 ஆயிரம் எனவே இங்கு மூன்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மதுரையில் 13 ஊராட்சிகளில் இருந்து மொத்தமாக 23 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி ரீதியாக போட்டியிடுவார்கள். எடுத்துக்காட்டாக அதிமுக, திமுக, நாம்தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்று கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நிறுத்துவார்கள். 23 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு அவர்களில் ஒருவர் மாவட்ட ஊராட்சி வார்டு தலைவர் ஆக பதவி ஏற்பார். மாவட்ட ஊராட்சி வார்டு தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார் என்றால், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 2 அணிகள் போட்டியிட்டு உள்ளது என்று எடுத்து கொள்வோம் இதில் A என்ற அணி 13 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது, B என்ற அணி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் என்று எடுத்துக் கொள்வோம். தற்போது A என்ற அணி தனது பெரும்பான்மையை நிரூபித்து தனது குழுவில் இருக்கும் ஒருவரை மாவட்ட ஊராட்சி வார்டு தலைவர் ஆக நியமிக்க முடியும். மீண்டும் அடுத்த வீடியோவில் மீதமுள்ள 3 பதவிகளைப் பற்றி பார்ப்போம்.
Comments
Post a Comment