Thirupparankundram Karthigai Maha Deepam - Madurai 2019 - கார்த்திகை மகா தீபம்

*ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 10.12.19 அன்று கார்த்திகை மகா தீபம் மாலை 6 மணி அளவில் ஏற்றப்பட்டது*

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மகா தீபம் - Full Video ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2ஆம் தேதி கார்த்திகை மகா தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று மாலை 6.00 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சி விநாயகர் கோயில் மேடையில் 3 அடி உயரம் 1. 5 அகல கொப்பரையில் 300 லிட்டர் நெய் மற்றும் 150 மீட்டர் காடாத் துணி மூலம் மகாதீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை மகா தீப திருவிழாவை முன்னிட்டு தினமும் காலையில் முருகப்பெருமான், தெய்வானை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்கச் சப்பர வாகனத்தில் கோயில் வளாகத்தினுள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலையில் மயில் வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் போன்ற வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது இதில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வைரத்தில் ஆன கிரீடம் அனுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கார்த்திகை மகா தீப தேரோட்டம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

மகா தீபம் ஏற்றுவதற்காக திருவண்ணாமலையில் இருந்து ஒரு குழு திருப்பரங்குன்றம் பகுதிக்கு வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது தற்போது மாலை 6.00 மணி அளவில் திருக்கோயிலில் உள்ள உற்சவர் சன்னதியில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவர் சன்னதியில் பால தீபம் ஏற்றிய அதே நேரத்தில் 180 அடி உயரமுள்ள திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள விநியாகர் கோவில் மேல் உள்ள மேடையில் மகா தீபம் ஏற்பட்டது.

Comments