காயத்துடன் போராடிய நல்லபாம்புக்கு அறுவை சிகிச்சை - எங்க நடந்தது இந்த அறுவை சிகிச்சை.
மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து பார்த்திருப்போம், வாங்க இந்த வீடியோவில் பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்வதை பார்ப்போம்.
காயத்துடன் போராடிய நல்ல பாம்புக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்,
பின் நல்ல பாம்பினை காட்டுப்பகுதியில் விட்ட வனத்துறையினர்.
எங்கே நடந்தது என்றால்
மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி ரோடு் முனியாண்டிபுரம் குடியிருப்பு பகுதியில் ஒரு நல்ல பாம்பு நகர்ந்து செல்ல முடியாமல் கிடந்ததுள்ளது.
அதன் உடலில் காயங்கள் இருந்ததால் அது உயிருக்கு போராடி உள்ளது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள், திருநகர் ஊர்வனம் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அந்த அமைப்பு பொறுப்பாளர்கள் அங்கு வந்து பாம்பை லாவகமாக பிடித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் அந்த பாம்பை பாதுகாப்பாக ஒரு பையில் எடுத்து போட்டு, மதுரை தல்லாகுளத்தில் உள்ள பன்நோக்கு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதைதொடர்ந்து டாக்டர் தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் அந்த பாம்பை பரிசோதித்துள்ளனர்.
உடனடியாக பாம்புக்கு முதல் உதவியும் அளிக்கப்பட்டது.
அந்த நல்ல பாம்பை காப்பாற்ற வேண்டும் என்றால் காயம் பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என டாக்டர் கூறியுள்ளனர்.
உடனடியாக 2 டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் அந்த பாம்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இதற்காக அந்த பாம்புக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு
2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
காயம் இருந்த இடத்தில் தையல் போடப்பட்டு கட்டப்பட்டது.
சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறிய அந்த பாம்பு நன்றாக ஊர்ந்து செல்கிறதா? என பரிசோதிக்கப்பட்டது.
மேலும் ஆட்களை பார்த்ததும் நல்ல பாம்பு சீறவும் தொடங்கியது.
அது தனது இயல்பான குணத்தை வெளிப்படுத்தியதை உறுதி செய்த கால்நடை மருத்துவர்கள், பின்னர் அந்த பாம்பை மீண்டும் ஊர்வனம் அமைப்பினரிடம் கொடுத்தனர்.
அவர்கள் அந்த பாம்பை, மதுரை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் வனத்துறை அதிகாரிகள், நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள காட்டுப்பகுதியில் அந்த நல்ல பாம்பை விட்டனர்.
மனிதருக்கு அறுவை சிகிச்சை செய்வது போல் பாம்பிற்கு அறுவை சிகிச்சை செஞ்சிருக்காங்க...
Comments
Post a Comment