Madurai Ayira Fish Catch - அயிரை மீன் எப்படி பிடிக்கிறாங்க பார்ப்போம்....


ஏரிகளிலும், குளங்களிலும் தண்ணீர் மறுகால் பாயும் பொழுது மட்டுமே அயிரை மீன்கள் தென்படும்.





மதுரையின் அடையாளமாக கருதப்படும் மல்லிகைப்பூ, ஜிகர்தண்டா, பணியாரம் உடன் அயிரை மீனும் இருக்கு. வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த அயிரைமீன் ஆனது கிடைக்கும். அபூர்வமாக கிடைக்கும் மீன் என்பதால் அயிரை மீன்கள் 1 கிலோ ரூ.1500-க்கு விற்பனை செய்ராங்க... சளி மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு அயிரை மீன் நல்ல மருந்தாக இருப்பதால் மார்க்கெட்டில் அயிரை மீனுக்கு எப்போதும் வரவேற்பு தான். தற்போது மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் பல இடங்களில் ஏரி குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது இதனால் அப்பகுதி உள்ள கிராம மக்கள் அயிரை மீனை பிடிச்சிட்டு இருக்காங்க... முன்னொரு காலத்தில் ஏழைகளின் உணவாக இருந்த அயிரைமீன் தற்போது பணக்காரர்கள் மட்டுமே வாங்கக்கூடிய உணவாக மாறிவிட்டது.

Comments