*உள்ளாட்சித் தேர்தல் என்றால் என்ன? பாகம் - 3
ஏற்கனவே நாம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர் பற்றி இதற்கு முந்திய வீடியோகளில் பார்த்தோம்.
தற்போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பற்றி பார்ப்போம்.
ஊராட்சி மன்ற தலைவர் என்பவர் பிரசிடெண்ட் மற்றும் பஞ்சாயத்து தலைவர் என்று அழைக்கப்படுவார்.
ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்சி ரீதியாக போட்டியிட முடியாது.
எடுத்துக்காட்டாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு நிற்கும் அனைவருக்கும் கட்சி அல்லாத சுயேட்சை சின்னங்கள் மட்டுமே வழங்கப்படும்.
ஊராட்சி மன்றத் தலைவர் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரு தலைவர் என்ற முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
எடுத்துக்காட்டாக திருப்பரங்குன்றத்தில் 38 ஊராட்சிகள் உள்ளது எனவே இங்கு 38 ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதேபோல் வார்டு உறுப்பினர் தேர்ந்தெடுப்பது என்பது ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களுக்கும் வார்டுகள் வரையறை செய்யப்பட்டிருக்கும்.
எடுத்துக்காட்டாக திருப்பரங்குன்றத்தில் உள்ள சிலைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்பது வார்டுகள் வரையறை செய்யப்பட்டிருக்கும் அதேபோல் அதன் அருகில் இருக்கும் சூரக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஆறுகள் வார்டுகள் வரையறை செய்யப்பட்டு இருக்கும் இதேபோல் திருப்பரங்குன்றத்தில் மட்டும் 324 வார்டுகள் உள்ளன எனவே இங்கு 324 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Comments
Post a Comment