உள்ளாட்சித் தேர்தல் என்றால் என்ன? பாகம் - 2
2019 - Tamil Nadu Local Body Election Means - உள்ளாட்சி தேர்தல் என்றால் என்ன ? பாகம் - II FULL Video
ஏற்கனவே நாம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பற்றி இதற்கு முந்திய வீடியோவில் பார்த்தோம்
தற்போது ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பற்றி பார்ப்போம்.
ஒன்றியக்குழு உறுப்பினர் என்பவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார் என்றால் 5,000 முதல் 7,000 வாக்குகளுக்கு ஒரு ஒன்றிய குழு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
எடுத்துக்காட்டாக திருப்பரங்குன்றம் ஊராட்சியில் 38 ஒன்றியங்கள் உள்ளது.
இதில் நிலையூர் ஊராட்சியில் ஓட்டுப்போடும் மக்கள் எண்ணிக்கை 2000,
அதே போல் அருகிலுள்ள கைத்தறி நகர் 3000 ஓட்டுகள் உள்ளது, என்றால் இரண்டு ஒன்றியங்களுக்கும் சேர்த்து ஒரு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
திருப்பரங்குன்றத்தில் 38 ஒன்றியங்களில் 22 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி ரீதியாகவும், தனித்தும் போட்டியிடலாம்.
தற்போது திருப்பரங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட 22 ஒன்றியக் குழு உறுப்பினர்களிடமிருந்து திருப்பரங்குன்றம் ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் திருப்பரங்குன்றம் ஒன்றிய குழு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எடுத்துக்காட்டாக திருப்பரங்குன்றத்தில் A என்ற அணி 12 இடங்களில் வெற்றி பெற்றும், B என்ற அணி 10 இடங்களில் வெற்றி பெறும் என்று எடுத்துக்கொண்டால், A என்ற அணி தங்கள் அணியில் உள்ள ஒருவரை திருப்பரங்குன்றம் ஒன்றிய குழுத் தலைவராகவும் மற்றொருவரை திருப்பரங்குன்றம் ஒன்றிய குழு துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்க முடியும்.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளை பற்றி அடுத்த வீடியோவில் பார்ப்போம்.
Comments
Post a Comment